சஞ்சிகை

உங்கள் ஆரோக்கிய வாழ்விற்கோர் வழிகாட்டி.

ஆரோக்கிய வாழ்விற்குரிய பலதரப்பட்ட தகவல்களை நிபுணத்துவ ஆளுமையுடனும் தமிழ் மக்களின் தேவைகளை முன்நிலைப்படுத்தியும் வெளிவரும் சஞ்சிகை நலவாழ்வு சஞ்சிகையாகும். மருத்துவச் செய்திகளிற்கப்பால் தமிழ் சமூகத்தின் பலதரப்பட்ட விடயங்களையும் கவனத்தில் கொண்டு அதற்குரிய சமூகநலக் கட்டுரைகளையும் நலவாழ்வு வெளியிட்டு வருகின்றது. இச்சஞ்சிகையில் வெளிவரும் அனேகமான கட்டுரைகள் இங்கு கல்வி பயின்று சுகாதார மற்றும் சமூகவியற் துறைகளில் பணிபுரியும் நிபுணத்துவம் கொண்ட தமிழர்களால் எழுதப்பட்டு வருகின்றது. அத்துடன் தாயக தமிழக உறவுகளுடனான பாலத்தை அமைக்கும் பொருட்டு அங்குள்ள திறமைவாய்ந்த நிபுணர்களையும் எமது சஞ்சிகையில் ஆசிரியர்களாக அவ்வப்போது இணைத்து கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம்.

இச்சஞ்சிகையினூடாக ஆரோக்கியம் பேணல், ஆரோக்கிய மேம்பாடு மற்றும் ஆரோக்கிய முற்காப்பு போன்ற மூன்று அம்சங்களை நோக்காகக் கொண்டு கட்டுரைகள் எழுதப்படுகின்றன. இணையங்களில் பலதரப்பட்ட தகவல்கள் இருப்பினும் முக்கிய விடயங்களை தொகுத்து நீங்கள் தேடி அலையா வண்ணம் சரியான செய்திகளைக் காவிவரும் சஞ்சிகையாக நலவாழ்வு விளங்குகின்றது.