தாய்மொழியிலான கருத்தரங்குகள்

மொழிசார் புரிதல் என்பது பல விடயங்களிற்கு அடிப்படையான விடயம். அதுவும் ஆரோக்கியம் என வரும் போது சுகாதாரத் தகவல்கள் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்வதற்கும் சிகிச்சைகள் செய்ய நேரிடின் வைத்தியர்கள் கூறுவதை விளங்கிக் கொள்வதற்கும் மொழியாற்றல் என்பது மிக மிக முக்கியமான விடயமாகும். நோய்களைப் பற்றி விளங்க அவற்றைப்பற்றி அறிந்திருத்தல் முக்கியம். புலம்பெயர் தேசத்தில் எமக்குத் தெரியாத பல நோய்கள் உண்டு. ஆகவே மொழிப்பிரச்சனையால் எமது முதற் சந்ததியினர் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் பல முக்கிய விடயங்களைத் தேர்ந்தெடுத்து ஆங்காங்கே கருத்தரங்குகளை நலவாழ்வு முன்னெடுத்து வருகின்றது. அன்றாட வாழ்வில் நாம் கதைக்கத் தெரிந்தாலும் மருத்துவ விடயங்களைப் புரிதல் என்பது தனியான ஒரு விடயம். அவற்றை சரியான முறையில் அறிவதற்கு தாய்மொழியிலான கருத்தரங்குகளே சிறந்த வழி.

கருத்தரங்குகளிற்கு அப்பால் துண்டுப்பிரசுரங்களாகவும் கட்டுரைகளாகவும் முக்கிய தகவல்களை நலவாழ்வு தொகுத்தளித்து வருகின்றது. இத்தகைய பிரசுரங்கள் சுகாதாரத்துறையில் பணிபுரியும் இந்நாட்டு வைத்தியர்களிற்கும் நோயாளிகளிற்கும் பயனுள்ள ஆவணங்களாக அமைகின்றன.

இதுவரை கீழ்வரும் தலைப்புக்களில் இவ்வாறான பயன்தரும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

  • நீரிழிவு
  • இதய இரத்த சுற்றோட்டம் தொடர்பான வியாதிகள்.
  • மன அழுத்தம்
  • முற்பாதுகாப்பு பரிசோதனைகள்
  • மருத்துவக் காப்புறுதிகள்

உங்கள் “ஆரோக்கியமே அளப்பரும் செல்வம்” எனவே அதற்காக நேரம் செலவிடுங்கள். எமது சந்திப்புக்களில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

இவ்வாறான சந்திப்புக்களை உங்கள் இடங்களில் ஒழுங்கு செய்ய விரும்புகிறீர்களா?
எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி: 077 977 86 60, மின்னஞ்சல்: info@nalavalvu.ch