மொழிபெயர்ப்பு

வைத்தியசாலைகளில் உங்கள் வியாதி பற்றிய விளக்கங்களை உங்கள் வைத்தியருடன் கலந்துரையாடுவதற்கு மொழி ஒரு தடையாக உள்ளதா? தரமான மொழி பெயர்ப்பு  சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நலவாழ்வு அமைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.
பின்வரும் அங்கங்கள் எமது மொழிபெயர்ப்பு சேவையில் இடம் பெறுகின்றன:

  • நேரடி மொழிபெயர்ப்பு: மருத்துவர்களுடனான வியாதி விளக்க கலந்துரையாடல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான மொழிபெயர்ப்பு சேவை. நீங்கள் எம்மை நேரடியாக அழைத்துச் செல்லலாம். அல்லது வைத்தியசாலையினூடாக எம்மை அணுகலாம்.
  • எழுத்து மூலமான மொழிபெயர்ப்பு: சுகாதாரத்தகவல்கள் மற்றும் மருத்துவத்துறைசார் அறிவியல் விளக்கங்கள் யாவும் தகைமை வாய்ந்தவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றன. உங்களது வைத்திய அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை மொழிமாற்றம் செய்து தருகின்றோம்.

எமது மொழிபெயர்ப்பு சேவை பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி: 077 977 86 60, மின்னஞ்சல்: info@nalavalvu.ch