இணைவோம் வெல்வோம்

அன்புள்ள தமிழ் உறவுகளிற்கு

தமிழ் மக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான செயற்திட்டம் தனியொரு அமைப்பினால் மட்டும் செய்து முடிக்கக்கூடிய ஒரு பணி அல்ல. ஆரோக்கிய வாழ்விற்கான அடிப்படைச்சிந்தனையும் அதற்கான செயற்திட்டங்களும் சுவிஸ் முழுவதும் பரவியுள்ள, சமூக நலனில் அக்கறையுள்ள சகல தமிழ் அமைப்புக்களினூடாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு நலவாழ்வு தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் நோக்கத்துடன் „இணைவோம் வெல்வேம்“ எனும் திட்டத்தை முன்னெடுக்கின்றது.

இணைவோம் வெல்வோம் என்பதன் நோக்கம் தமிழரின் ஆரோக்கிய வாழ்வு சகல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே. இதனூடாக பல அமைப்புக்களிற்கிடையே பரஸ்பரம் நல்லிணக்கம் வளர்வதுடன் கூட்டுச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவும் வழி பிறக்கும். இதனால் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் மேம்பாடு காண்பதுடன் செயற்திட்டங்களினூடாக மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கவும் சாத்தியம் உண்டு.

அதன்படி நாம் அணுகும் அமைப்புக்களை முதலில் நலவாழ்வு அமைப்பில் அங்கத்துவம் பெறக் கோருகின்றோம். அடுத்ததாக இவ்;வமைப்புக்களில் நலவாழ்வுச் செயற்பாடிகளிற்கென ஒருவரை தொடர்பாளராக நியமிக்கும்படி கோருகின்றோம். அவ்வாறு நியமிக்கப்படுபவர் அவ் அமைப்பினால் முன்னெடுக்கப்படக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றிற்கு தயார்படுத்தப் படுவதுடன் பலதுறைகளில் எம்மால் பயிற்சிப்பட்டறைகளினூடாக பயிற்றுவிக்கப்பட்டு (உ-ம்: முதலுதவி பயிற்சி) அந்தந்த இடங்களில் தேவைக்கேற்றபடி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஊக்குவிக்கப்படுவார்.

இத்திட்டத்தினூடாக நாம் இதுவரை சுவிஸ் தமிழர் இல்லம், சைவத்தமிழ் சங்கம் (சூறிச் சிவன் கோயில்) போன்றவற்றுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

▪ இணைவோம் வெல்வோம் விண்ணப்பப் படிவம்